தூய காற்று,
பசுமை கொஞ்சும் தோட்டம்,
படர்ந்து விரியும் செடி, கொடிகள்,
வான் எட்டும் மரங்கள்,
சுற்றித் திரியும் ஓரினங்கள்,
கிளை தொடும் காய் கனிகள்,
ஆடி மகிழும் மழலைச் செல்வங்கள்,
மகிழ்ச்சியுடன் முதியோர்கள்...
கண்கள் பளிச்சிட -
தொலைந்தது காட்சி.
கார்பன் கலந்த காற்று,
வான் எட்டும் அடுக்ககங்கள்,
சுற்றித் (தி)தெரியும் வாகனங்கள்,
பூத்துக் குலுங்கும் புகை மண்டலங்கள்,
சந்தோஷமாய் உலவும் மரவெட்டி(யான்)கள்,
பெருக்கெடுக்கும் நோய்கள்...
கண்கள் பளிச்சிட -
தெளிவாய் பிரதிபலித்தது...
தொலைந்தது - கனவு
பிரதிபலிப்பது நிகழ்வு...!
'அழிக்கும்' தொழில்நுட்பம் தவிர்த்து
சுவாசத்தை சேதப்படுத்தா
நுண்ணறிவை வளர்த்து
'உருவாக்கும்' - புதிய நுட்பம்
விழைகிறோம்!
ஓசோனில் போடும் ஒவ்வொரு
துளையும் - நம்
உடலை துளைத்துக் கொண்டிருக்கிறது
- புற்றுநோயாய் , கண்புரையாய்...
வெடித்துச் சிதறி (நிலநடுக்கம்)
வாரி அடித்து (புயல்)
பொங்கி அழுது (சுனாமி)
இன்னுமா,
நம் அறிவுக்கு எட்டவில்லை...
தனது அடுத்த சீற்றத்தை
வெளிபடுத்தியதும் -
ஆராய்ந்து 'பெயர்' சூட்டுவதை
விடுத்து ---
இயற்கையை வாழவைத்து - நாமும்
வாழும் அறிவியல் வேண்டும்...
இது அழிவை மீட்டெடுக்கும் வழியல்ல,
எஞ்சியதை வாழ வைக்கும் - ஒரு
"பசுமைப்" போராட்டம்...!
(Written on the theme 'GO Green' for the event of Bay decoration)
Thursday, January 13, 2011
Subscribe to:
Posts (Atom)