Tuesday, August 18, 2020

முடக்களின் துளிகள்


இல்லத்தில் அடைந்திருக்க 
  இயலாதென்றோமே, 
இன்று அவ்வில்லம் ஒன்றே 
  கதி என்று ஆனோமே!

ஆடம்பரங்கள் விரும்பிய 
  திருமணங்கள்,
நான்கு சுவற்றுக்குள்ளும் 
 இயலுமென்று அறிந்தோமே! 

உற்றார் உறவினர் கூடும் 
 பல லட்சங்கள் குவித்த, 
மண்டபங்கள் இன்றோ 
 தனி மரமாய் 
 தீண்ட நெருப்பாய்!

என் பெயரில்லை, 
என் படிப்பேற்ற வில்லை 
 என்று சிறு சிறு, 
குறை கூறிய உறவினர்கள் 
 இன்றோ... 
பெறுந்திரையில் 
வாழ்த்தி மறைகின்றனர்... 

கூவிக்கூவி, கதறிக் கதறி 
முடியா மாற்றம்,
இவ்வண்ணம் திடுக்கென 
மாறும் - என 
நினைத்திருக்கவில்லை தாம்!

நட்புடனும் உறவுடனும் 
 விருந்துண்டோமே, 
இன்று 
அவை அனைத்தும் 
 அவர் அவர் வீட்டில் 
 என்றோமே... 

தழுவலும் முத்தங்களும் 
 அன்பேன்றோமே... 
அட, 
கைகூப்புவதும் நமதே  
 என நினைவுண்டோமே...

நம் பிள்ளைகள், 
 அனைத்தும் கற்க  
எங்கெங்கோ சென்றுவித்தோம், 
இன்றோ
 ஒருபடி தாண்டா!!!
 என அதிசயித்தோமே...

அட இன்னுமா 
நமக்கு புலப்படவில்லை...?
அட இன்னுமா 
நமக்கு புலப்படவில்லை...?

எதைக் கொண்டு வந்தோம் 
 எதை எடுத்துச்  செல்ல...
எதைக் கொண்டு வந்தோம் 
 நாம் 
 எதை எடுத்துச் செல்ல...

மாற்றம் ஒன்றே 
 மாறாதது என்பதைத் தவிர...! 
மாற்றம் ஒன்றே 
 என்றும் 
 மாறாதது என்பதைத் தவிர...! 

Written during lockdown days and this was presented in UAE Tamil speakers forum.