எனக்காக நீயும் உனக்காக நானும்
வாழ்கின்ற வாழ்க்கை
விநோதமானது...
என்னோடே என்றும் இருந்த போதிலும்,
இன்பத்திலும்,
துன்பத்திலும்,
நீமட்டுமே எனக்காக் இருக்கிறாய் என்று...
எனது வெற்றி தோல்வி - இரண்டிலும்
நீ என்றுமே இருக்கிறாய் என்று...
எவரும் துணை இல்லாதபோதும்,
சற்றும் யோசிக்காமல்,
நீ மட்டுமே வருவாய் என்று...
எத்தனை உறவுகள் வந்த போதும்,
எங்கெங்கோ தேடி அலைந்த போதும்,
சிறிய பகலையும்,
நீண்ட இரவையும்,
எப்போதும் நிறைத்து கொண்டே இருக்கும் உன்னை...
எங்ஙனம் அறியாமல் போனேன்...?
"கண்ணீரே..."
நீயே என் உயிர் தோழன் என்று...!!!
என் கன்னங்கள் வந்து பொழியும் முத்த மழையே -
அதையும் மீறும் உறவே...
உனக்கான அஞ்சலி இது...
இரங்கல் அஞ்சலி அல்ல -
நன்றியின் வெளிப்பாடு...
Monday, September 28, 2009
Monday, September 14, 2009
அந்த சில நாட்கள் - பத்திரமாக...
வந்திறங்கியதும் ஸ்தம்பிக்க வைத்தt
ஸ்தம்பிக்க வாய்த்த
வான் ஊர்தி நிலையம்,
கோபத்தின் உச்சிக்கு செல்லும்
மண்ணின் சீற்றம்,
சில உறவுகளை அளித்த
கதவுகள்,
தனிமையின் தனிமையை
உணர்த்திய அறைகள்,
அறிவை வளர்த்த அலுவலகம்,
இனிமையாக ஆரம்பித்து இனிதே முடிந்த
அழகான நட்பு,
இவையனைத்தும்...
எடுத்த இடத்தில் பத்திரமாக..!
விடை பெறுகின்றேன்...
நான் இன்று நானாக ...!
என் பயணத்தில்,
நான் இன்று நான்(தனி)ஆக...
Subscribe to:
Posts (Atom)